10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – முக்கிய அறிவிப்பு!!
10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் தனித்தேர்வர்கள் வரும் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் வாயிலாக காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து, 16ஆம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

தவறும் பட்சத்தில், மார்ச் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தட்கல் முறையில் விண்ணப்பிக்க பத்தாம் வகுப்புக்கு, 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
பிளஸ் 1, 2 வகுப்புக்கு ஆயிரம் ரூபாய் தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக செலுத்த வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in

