Theme Check

மெரினாவில் குளித்த போது நீரில் மூழ்கி 12ஆம் வகுப்பு மாணவன் பலி!!

மெரினாவில் குளித்த போது நீரில் மூழ்கி 12ஆம் வகுப்பு மாணவன் பலி!!

மெரினாவில் குளித்த போது நீரில் மூழ்கி 12ஆம் வகுப்பு மாணவன் பலி!!
X

சென்னை மெரினா கடற்கரையில் குறித்த 12ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அஷ்ரப் (17) மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரும் அவரது நண்பர் டேனியலும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு மெரினா கடற்கரைக்கு சென்றனர்.

நொச்சி நகர் டி பிளாக் எதிரில் கடலில் அஷ்ரப், டேனியல் ஆகிய இருவரும் குளித்தனர். அஷ்ரப் தனக்கு நீச்சல் தெரியும் அதனால் சிறிதுரம் செல்கிறேன் எனக்கூறி சென்றார். அப்போது அவரை ராட்சத கடல் அலை இழுத்துச் சென்றது.

death

இதனையடுத்து அருகில் இருந்த மீனவர்கள் டேனியலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அஷ்ரப்பை காப்பாற்ற முடியவில்லை. அஷ்ரப் உடல் நொச்சிக்குப்பம் 10ஆவது பிளாக் எதிரில் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார் மாணவன் அஷ்ரப் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it