Theme Check

10 பேருக்கு செம்மொழித் தமிழ் விருது.. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்..!

10 பேருக்கு செம்மொழித் தமிழ் விருது.. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்..!

10 பேருக்கு செம்மொழித் தமிழ் விருது.. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்..!
X

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் 2010 முதல் 2019 வரையிலான ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’களுக்கான விருதாளர்கள் பட்டியல் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, தமிழறிஞர்கள் மற்றும் தமிழக பெருமக்களின் முன்னிலையில் மாநில அளவிலான தமிழ்மொழி சார்ந்த விழாவில் கூடிய விரைவில் இவர்களுக்கு விருது வழங்கப்படும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு இன்று (22-ம் தேதி) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விருதுடன் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றுடன் கலைஞர் கருணாநிதியின் சிறிய அளவிலான சிலையும் வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்றவர்களின் விவரம்:

  1. 2010- முனைவர் வீ.எஸ்.இராஜம், (Former Senior Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsylvania).

  2. 2011 – பேராசிரியர் பொன், கோதண்டராமன் (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை).

  3. 2012- பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்).

  4. 2013 – பேராசிரியர் ப. மருதநாயகம் (மேனாள்இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்,மேனாள் பதிவாளர்,புதுவைப் பல்கலைக்கழகம்).

  5. 2014 – பேராசிரியர் கு. மோகனராசு (மேனாள் பேராசிரியர்&தலைவர். திருக்குறள்ஆய்வுமையம், சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை).

  6. 2015- பேராசிரியர் மறைமலை இலக்குவனார்(மேனாள் தமிழ்ப்பேராசிரியர். மாநிலக்கல்லூரி).

  7. 2016 – பேராசிரியர் கா. ராஜன் (மேனாள் பேராசிரியர்,வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்).

  8. 2017 – பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், Professor and Head of the Institute of Indology and Tamil Studies, Cologne University,Germany).

  9. 2018 கவிஞர் ஈரோடு தமிழன்பன் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர்,புதுக் கல்லூரி, சென்னை).

  10. 2019 -பேராசிரியர் கு.சிவமணி (மேனாள்முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி,நெல்லை).

Next Story
Share it