Theme Check

முதல் பந்திலேயே கிளீன் போல்டு! நடராஜன் அசத்தல்!!

முதல் பந்திலேயே கிளீன் போல்டு! நடராஜன் அசத்தல்!!

முதல் பந்திலேயே கிளீன் போல்டு! நடராஜன் அசத்தல்!!
X

சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை தனது முதல் பந்திலேயே க்ளீன் போல்டாக்கி வெளியேற்றி தமிழகத்தைச் சேர்ந்த வீரர் நடராஜன் அசத்தினார்.

ஐபிஎல் 17ஆவது லீக் போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இரு அணிகளுமே இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கின.

சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், உத்தப்பா ஆகியோர் களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் ஓவரில் பவுண்டரியுடன் ரன் கணக்கை துவங்கிய சென்னை அணி நிதானமாக விளையாடத் துவங்கியது.

Ruturaj

3 ஓவர்களில் 25 ரன்கள் குவித்த இந்த ஜோடியை தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டர் சுந்தர் பிரித்தார். தனது முதல் பந்திலேயே உத்தப்பாவை வெளியேற்றி அசத்தினார் சுந்தர். அடுத்ததாக மொயின் அலியுடன் நிதானமாக விளையாடினார் ருதுராஜ்.

இந்நிலையில் நடராஜன் வீசியே இன்ஸ்விங் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார் ருத்துராஜ். 13 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள் விளாசி வெறும் 16 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார் ருதுராஜ்.

T-Natarajan

முன்பு விளையாடிய மூன்று ஆட்டங்களில் ருதுராஜ் எடுத்த ரன்கள் 0,1,1. மொத்தமாக அவரது இந்த சீசன் சராசரி வெறும் 4.5 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it