Theme Check

கோகோ-கோலா குடித்த நபர் திடீரென உயிரிழப்பு- அதிர்ச்சி சம்பவம் !!

கோகோ-கோலா குடித்த நபர் திடீரென உயிரிழப்பு- அதிர்ச்சி சம்பவம் !!

கோகோ-கோலா குடித்த நபர் திடீரென உயிரிழப்பு- அதிர்ச்சி சம்பவம் !!
X

1.5 லிட்டர் கோகோ கோலா குளிர்பானத்தை குடித்தவர் திடீரென உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்கள் பார்ட்டி, சுற்றுலா செல்லும்போதும், பிரியாணி சாப்பிடும் போதும் முக்கிய பங்கு வகிப்பது பெப்சி, கோகோ கோலா, செவன் அப் உள்ளிட்ட குளிர்பானங்கள். ஆனால் தமிழகத்தில் அண்மைக்காலமாக இதுபோன்ற குளிர்பானங்களின் விற்பனை சரிந்து வருகிறது என்றே கூறலாம்.

ஆனால், தற்போது இனி கோகோ கோலாவை குடிக்கலாமா என யோசிக்கும் அளவுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, கோகோ கோலா குளிர்பானத்தை அதிகமாக குடித்து ஒருவர் உயிரை இழந்துள்ளார். மதுபானத்தை ராவாக குடித்துவிட்டு, போதை தலைக்கேறி உயிரிழந்தவர்களை கேள்விபட்டிருப்போம். ஆனால், குளிர்பானத்தை குடித்து உயிரிழப்பது என்பது எப்போதுதாவது, அரிதாக நடைபெறும்.

coca cola

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் நபர் ஒருவர் அண்மையில் 1.5 லிட்டர் கோகோ கோலா பானத்தை வாங்கி, 10 நிமிடத்தில் குடித்துள்ளார். அடுத்த 6 மணி நேரம் கழித்து அவருடைய வயிறு வீங்கியுள்ளது. நேரம் செல்ல செல்ல, அவருக்கு வயிற்று வலியும் அதிகரித்துள்ளது.

கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் குடும்ப உறுப்பினர்கள் அவரை சாவோயாங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு உடல் நலப்பிரச்சனைகள் எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. பின்னர், சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கும்போது குடலின் சுவர் மற்றும் போர்டல் நரம்பில் நியூமேடோசிஸ் என்ற அசாதாரண வாயு இருப்பது கண்டறியப்பட்டது.

coca cola

அதிகப்படியான குளிர்பானத்தை பருகியவுடன், கல்லீரலில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உருவாகி, இஸ்கெமியா உருவாகியுள்ளது. இதனால், நரம்பு பாதிப்புகள் உருவாகி அவர் உயிரிழப்பை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும்போதே அந்த நபர் உயிரிழந்தது மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதிகப்படியான குளிர்பானத்தை பருகி, அசாதாரண வாயு அடைப்பால் அந்த நபர், தன் வாழ்க்கையை பறிகொடுக்க நேரிட்டுள்ளதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

எனினும் அந்த நபர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் கோகோ கோலாவை அதிகம் பருகிய காரணத்தினால், உடலில் உருவாகிய வாயுப் பிரச்சனையால் உயிரிழப்பை எதிர்கொண்டுள்ளார் என்ற தகவலை மட்டும் டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it