நடிகை நிவேதா பெத்துராஜுக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி !!

நடிகை நிவேதா பெத்துராஜுக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி !!

நடிகை நிவேதா பெத்துராஜுக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி !!
X

தமிழ் திரையுலகில் அதிகளவில் நடிகைகள் அறிமுகமாகும் நிலையில் ஒருசிலர் மட்டுமே ரசிகர்கள் மனத்தில் இடம்பெறுவர். அந்த வகையில் தற்போது முத்திரை பதித்து வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். முதல் படமே வெற்றிப்படமாக அமைய ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன், பிரபுதேவாவுடன் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தமிழ்நாட்டிலிருந்தே அறிமுகமாகி முன்னணி நடிகையாக நிவேதா பெத்துராஜும் பிரபலமடைந்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் அவர் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், ஸ்விக்கி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாட்டை ஆர்டர் செய்ததாகவும், சாப்பாட்டை சாப்பிட முயன்றபோது அதில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் நிவேதா பெத்துராஜ் இணைத்துள்ளார்.

மேலும், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தி உள்ளார். இதுவரை இரண்டு முறை எனது உணவில் கரப்பான் பூச்சியை கண்டெடுத்துள்ளேன் என அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்

Tags:
Next Story
Share it