அதிர்ச்சியில் கோவை மக்கள்..!! தேவாலயத்தில் உள்ள சிலையை சேதப்படுத்தியது பள்ளி மாணவனா ?
அதிர்ச்சியில் கோவை மக்கள்..!! தேவாலயத்தில் உள்ள சிலையை சேதப்படுத்தியது பள்ளி மாணவனா ?

ஜனவரி 23ம் தேதி கோவை ராமநாதபுரத்தில் உள்ள தேவாலயத்தில் உள்ள சிலை சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து இந்து அமைப்புகள் மீது புகார் எழுந்தது. ஆனால் பள்ளி மாணவன் ஒருவன் சம்மந்தப்பட்டுள்ளது கோவை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவனுக்கு மூளைச்சலவை செய்து மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் இந்தச் செயலைத் தூண்டிவிட்டது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிறுவர்களைத் தூண்டி விட்ட விவகாரத்தில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் பெயரும் அடிபடுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரணையில் விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது. உயர்சாதி சிறுவர்களை இத்தகைய செயலுக்கு பயன்படுத்துவார்களா? பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவது தான் இந்து அமைப்புகளின் குறிக்கோளா? என்ற கேள்விகள் சமூகத்தளத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

