Theme Check

எப்படியாபட்ட குளிரையும் சமாளிக்கும் ஆடை: எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரத்யேக தயாரிப்பு !

எப்படியாபட்ட குளிரையும் சமாளிக்கும் ஆடை: எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரத்யேக தயாரிப்பு !

எப்படியாபட்ட குளிரையும் சமாளிக்கும் ஆடை: எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரத்யேக தயாரிப்பு !
X

இந்தியாவுக்கு எல்லையில் பாகிஸ்தான், சீனா நாடுகள் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் எல்லைகளில் எப்போதும் இந்திய ராணுவ வீரர்கள் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவர். எல்லையில் பயங்கரவாதிகள், எதிர்தரப்பு வீரர்களின் அச்சுறுத்தல் ஒருபக்கம் இருக்க, காலநிலையையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

army india

குறிப்பாக,எல்லைக்கோடுகளின் பெரும்பகுதி இமயமலை உச்சியில் அமைந்திருப்பதால் கடுங்குளிர் நிலவும். சியாச்சின், கார்கில் போன்ற பகுதியில் -10 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை காணப்படும். இதனால் வீரர்கள் குளிர் காலத்தில் உயரமான இடத்தில் இருந்து சற்று பின் வாங்கி வருவார்கள். இதனை பயன்படுத்தி எதிரி நாட்டு படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் தயாரித்து கொடுக்கும் டி.ஆர்.டி.ஓ., வீரர்களை கடுங்குளிரில் இருந்து காக்கும் வகையில் பிரத்யே ஆடையை வடிவமைக்கும் பணியில் இறங்கியது. தற்போது பணி முடிவடைந்து அதற்கான தொழில்நுட்பத்தை ராணுவத்திடம் வழங்கியது.

army india

டி.ஆர்.டி.ஓ. வடிவமைத்துள்ள ஆடை 15 டிகிரியில் இருந்து மைனஸ் 50 வரையிலான கடுங்குளிரை தாங்கும் வகையில் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இது எல்லையில் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என கருதப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it