Theme Check

ஓடும் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை..

ஓடும் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை..

ஓடும் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை..
X

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோந்த மதலைமுத்து மகள் சோபியா கிளாரா (19). இவா், தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில் பாதையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்தது சோபியா கிளாரா என்பது தெரியவந்தது.

ஓடும் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை..

கல்லூரிக்கு வந்த மாணவி சோபியா மதியம் கல்லூரி முடிந்த பிறகு கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு சென்று கோவையிலிருந்து மும்பை நோக்கி சென்ற குா்லா விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. கல்லூரி படிப்பு தொடா்பாக அம் மாணவியை, பெற்றோர் கண்டித்ததாகவும், இதனால் மனமுடைந்த அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

newstm.in

Tags:
Next Story
Share it