கல்லூரி மாணவர் கொன்று புதைப்பு.. 10ஆம் வகுப்பு மாணவிகளிடம் விசாரணை.. பகீர் பின்னணி !
கல்லூரி மாணவர் கொன்று புதைப்பு.. 10ஆம் வகுப்பு மாணவிகளிடம் விசாரணை.. பகீர் பின்னணி !

பள்ளி மாணவியை வீடியோ பிடித்து பணம் கேட்டு மிரட்டியர் கல்லூரி மாணவனை கூலிப்படையை ஏவி கொன்று புதைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய ஓபுளாபுரத்தை அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இளைஞரின் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. குப்பை மேடு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமாக தோண்டப்பட்ட குழியில் பார்த்தப்போது இளைஞர் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசார் கும்முடிபூண்டி வட்டாட்சியர் மகேஷ் முன்னிலையில் குறிப்பிட்ட இடத்தில் முழுமையாக தோண்டி புதைக்கப்பட்ட இளைஞரின் சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். கொலை செய்யப்பட்ட இளைஞர் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பதும் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் மாணவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது, மாணவர் பிரேம்குமாருக்கும் வண்டலூர் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த மாணவிகளுடன் அடிக்கடி தனிமையில் இருந்த பிரேம்குமார் அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோவை காட்டி மிரட்டி மாணவிகளிடம் சேட்டையை தொடங்கியுள்ளார் பிரேம்குமார்.

மேலும் மாணவிகளிடம் பணம் பறித்துள்ளார். மிரட்டலுக்கு அஞ்சி ஒன்றரை லட்சம் வரை கொடுத்த மாணவிகள் அதற்கு மேல் கொடுக்க மனமின்றி என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், முகநூலில் பழக்கமான தனது நண்பர் அசோக்குமார் என்பவரிடம் இதனை மாணவிகள் இருவரும் கூறியுள்ளனர்.
இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மாணவர் பிரேம்குமாரை கொலை செய்ய திட்டம்போட்டனர். வழக்கம்போல் பணம் கேட்ட பிரேம் குமாரை எளாவூர் சோதனை சாவடி அருகே வந்து வாங்கிக்கொள்ளுமாறு தொலைபேசியில் மாணவிகள் கூறியுள்ளனர். அதனை நம்பி தனது நண்பர் பிரவீனுடன் அங்கு சென்ற பிரேம்குமாரை கூலிப்படையினர் சுற்றி வளைத்து தாக்கினர்.

மேலும், பிரேம்குமாரை பைக்கில் கடத்திய கூலிப்படையினர் கொட்டா மேடு பகுதியில் தனிஅறையில் வைத்து 2 நாட்களாக சித்ரவதை செய்து மண்வெட்டியால் வெட்டி கொன்றுள்ளனர். அதன்பிறகு உடலை அந்த பகுதியில் குப்பைமேட்டில் புதைத்துவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. கொலை நடந்த இடத்தில் மாணவிகள், அசோக் உள்ளிட்ட 5 பேர் பைக்கில் சென்றது தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியப்போது இந்த தகவல் வெளிவந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

