Theme Check

விசாரணைக்கு அழைத்துச்சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு... ராமநாதபுரத்தில் பதற்றம்..!

விசாரணைக்கு அழைத்துச்சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு... ராமநாதபுரத்தில் பதற்றம்..!

விசாரணைக்கு அழைத்துச்சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு... ராமநாதபுரத்தில் பதற்றம்..!
X

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, வாகனத்தை நிறுத்தாமல் சென்ற மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்குப் பின் வீடு திரும்பிய மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். காவலர்கள் அடித்துத் துன்புறுத்தியதாலே மாணவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே நீர்க்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சஞ்சய் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியும், அவர்கள் நிற்காமல் சென்றுள்ளனர்.

இதனால் காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்று விரட்டி பிடித்துள்ளனர். பின்னர் மணிகண்டனை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மாலை 06.30 மணி அளவில் பெற்றோர்களை அழைத்து அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவன் மணிகண்டன் காலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் .

இதனையடுத்து காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது மாணவரை துன்புறுத்தி கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காவல் நிலையத்திலிருந்து அழைத்து வரும்போதே மணிகண்டனால் நடக்க முடியவில்லை எனவும், பின்னர் வீட்டிற்கு வந்த அவர் மூன்று முறை ரத்த வாந்தி எடுத்தார் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மணிகண்டன் பிறப்புறுப்பில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் காவல்துறையின் தரப்பிலிருந்து மணிகண்டனை தாங்கள் தாக்கவில்லை என்றும் , பாம்பு கடித்து இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதனை ஏற்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனை வாயில் முன்பாக , முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்

Next Story
Share it