Theme Check

ஆசைக்கு இணங்க மறுத்த கல்லூரி மாணவி கொலை- சக மாணவர்கள் கொடூரச் செயல் !!

ஆசைக்கு இணங்க மறுத்த கல்லூரி மாணவி கொலை- சக மாணவர்கள் கொடூரச் செயல் !!

ஆசைக்கு இணங்க மறுத்த கல்லூரி மாணவி கொலை- சக மாணவர்கள் கொடூரச் செயல் !!
X

19 வயது இளம் பெண் ஒருவர் சக கல்லூரி மாணவர்களால் விஷம் கொடுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹலினா பகுதியில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 வயது இளம்பெண் ஒருவர் தனது பரத்பூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணுடன் அதே கல்லூரியில் படிக்கும் 5 மாணவர்கள் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் 5 மாணவர்களும் தங்களுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என மாணவியை கட்டாயப்படுத்தியுள்ளனர். இவர்களின் வற்புறுத்தலுக்கு மாணவி இணங்க மறுத்துள்ளார்.

poison

இதையடுத்து அந்த மாணவியை அவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை அந்த மாணவியை பின்தொடர்ந்த அந்த 5 பேரும் கட்டாயப்படுத்தி ஒரு திரவத்தை குடிக்க வைத்துள்ளனர். வீட்டிற்கு சென்றதும் மாணவி வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

poison

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரித்துவருகிறது. மேலும், உயிரிழந்த பெண்ணின் உடற்கூறு ஆய்வு மற்றும் தடயவியல் முடிவுகளுக்காகவும் காத்திருப்பதாகவும் மேற்கூரிய தகவல்களையும் விசாரணை நடத்திய போலீசார் கூறுகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it