Theme Check

கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!! விழுப்புரத்தில் பரபரப்பு!!

முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ப்ரித்திகா என்ற மாணவி விழுப்புரம் மாவட்டம் பெரம்பை கிராமத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியின் இடைவேளை நேரத்தில் மாணவி ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பப்ஸ் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது.

கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!! விழுப்புரத்தில் பரபரப்பு!!
X

விழுப்புரத்தில் பேராசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் கல்லூரியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ப்ரித்திகா என்ற மாணவி விழுப்புரம் மாவட்டம் பெரம்பை கிராமத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியின் இடைவேளை நேரத்தில் மாணவி ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பப்ஸ் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது. அதனைக் கண்ட பிரதாபன் என்ற பேராசிரியர் மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!! விழுப்புரத்தில் பரபரப்பு!!
இதனால் மனமுடைந்த மாணவி ப்ரித்திகா கல்லூரியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த காயமடைந்த மாணவி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஒருமுறை பேராசிரியர் பிரதாபன் மாணவி ப்ரித்திகாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே பேராசிரியர் பிரதாபன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it