கதறியழுத கல்லூரி மாணவிகள்!! லட்சக்கணக்கில் பணம் பறித்த கல்லூரி மாணவர்!! அதிர்ச்சியில் பெற்றோர்!!
தென்காசி, சேந்தமரம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 40க்கும் மேற்பட்ட இளம் பெண்களை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து டிக்டாக் வெளியிட்ட செல்வராஜ் மகன் கண்ணன் (19) என்கிற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ள கண்ணன் எனும் மாணவன், டிக்டாக் செயலியில் தன்னை விதவிதமாக அலங்கரித்துக்

தென்காசி, சேந்தமரம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 40க்கும் மேற்பட்ட இளம் பெண்களை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து டிக்டாக் வெளியிட்ட செல்வராஜ் மகன் கண்ணன் (19) என்கிற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தென்காசியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ள கண்ணன் எனும் மாணவன், டிக்டாக் செயலியில் தன்னை விதவிதமாக அலங்கரித்துக் கொண்டு நடனமாடுவது, சினிமா வசனம் பேசுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வந்தார். டிக்டாக்கில் இவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றி வந்த நிலையில், தென்காசியில் பள்ளி, கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்தும் நடனமாடி டிக்டாக்கில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதில் சில பேருக்குத் தெரியாமலேயே அவர்களை ஆபாசமாகவும் வீடியோ எடுத்தாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்களை வெளிட்டு விடுவதாக அந்த கல்லூரி மாணவிகளைத் தொடர்ந்து மிரட்டி 2 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கண்ணன் வசூலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
newstm.in

