கல்லூரி மாணவர்கள் நள்ளிரவில் திடீர் போராட்டம்!!
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி விடுதி அருகே நடைபெறும் சமூகவிரோதக் செயலை கண்டித்தும் அந்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நள்ளிரவில் கல்லூரி விடுதியை சேர்ந்த மாணவர்கள்நூற்றுக்குமேற்பட்டோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி விடுதி அருகே நடைபெறும் சமூக விரோதக் செயலை கண்டித்தும் அந்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நள்ளிரவில் கல்லூரி விடுதியை சேர்ந்த மாணவர்கள் நூற்றுக்குமேற்பட்டோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லூரியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர், வெளியூரிலிருந்து அவர்கள் தங்கி படிப்பதற்காக கல்லூரி அருகாமையிலேயேஅம்பேத்கர் விடுதி பிற்படுத்தப்பட்டோர் விடுதி உள்ளிட்ட 4 விடுதிகள் பட்டு வருகின்றது, இந்த விடுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்,.

இந்நிலையில் அம்பேத்கர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி அருகே உள்ள காலியான இடத்தில் தொடர்ச்சியாக வெளியில் உள்ள பகுதியை சேர்ந்த சிலர் மது கஞ்சா போதை ஊசி உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது இது குறித்து விடுதி மாணவர்கள் பலமுறை புகார் தெரிவித்தும் கல்லூரி நிர்வாகமும் காவல் துறையினரோ நடவடிக்கை எடுப்பதாக மாணவர் தரப்பில் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கல்லூரி விடுதி அருகே உள்ள காலியான இடத்தில் சிலர் மது அருந்திக்கொண்டிருக்கும் பொழுது கல்லூரி விடுதியிலிருந்துதட்டிக்கேட்டமாணவர்கள் மீது மதுபோதையில் இருந்தவர்கள் பாட்டில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாககூறப்படுகின்றதுஇதனையடுத்துஆத்திரமடைந்தமாணவர்கள் சமூக விரோதச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நள்ளிரவில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு புதுக்கோட்டை திருமயம் சாலையில் மறியல் போராட்டத்தில்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்ஈடுபட்டனர்,
இந்த போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகர துணை கண்காணிப்பாளர் கோபாலசமுத்திரம் தலைமையிலான போலீசார்மாணவர்களிடம் ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் இதுபோன்ற சமூக விரோதச் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் உத்தரவாதம் கொடுத்ததை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்,
newstm.in

