வண்ணமயமாக நிறைவடைந்த ஒலிம்பிக்.. சீனாவை பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா !!
வண்ணமயமாக நிறைவடைந்த ஒலிம்பிக்.. சீனாவை பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா !!

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக நடந்தது. ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறின. எனினும் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் நேற்றுடன் முடிந்து விட்டன. இந்திய அணி பங்கேற்ற கடைசி நாளில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.
போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பதக்க பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது. அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்கள் பெற்றுள்ளது. இன்று மட்டும் அமெரிக்கா 3 தங்கம் வென்றது.

அடுத்ததாக 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடம் பிடித்தது. போட்டியை நடத்தும் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களை ஜப்பான் கைப்பற்றி உள்ளது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடத்தில் உள்ளது.


The Olympic spirit is in all of us.
— Olympics (@Olympics) August 8, 2021
A display of beautiful, luminous colours swirl together, representing the many flags of the world.
They form the Olympic Rings, a timeless symbol of unity. #StrongerTogether #Tokyo2020 #ClosingCeremony pic.twitter.com/38dv0e0w98
newstm.in

