தலைமையேற்க வா! முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் விஜய் !! போஸ்டரால் பரபரப்பு
தலைமையேற்க வா! முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் விஜய் !! போஸ்டரால் பரபரப்பு

நடிகர் விஜயை கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வருகின்றனர். அதனை ஊக்குவிக்கும் வகையில் கிடைக்கு திரைப்பட விழா உள்ளிட்ட அனைத்து டேடைகளிலும் விஜய் தவறாமல் அரசியல் பேசுகிறார். இதுவும் ரசிகர்கள் அழைப்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் கடைசியாக வெளியான சில படங்களில் அவர் அரசியல் வசனம் பேசி வருகிறார். இந்த நிலையில், இதனால் தான் ரசிகர்கள் அவரது அரசியல் பிரவேசத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில், வருகிற 22ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு நகரங்களில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

அந்த வகையில் திண்டுக்கல் நகர் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டரில் அரசியல் சற்று தூக்கலாக உள்ளது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் செங்கோலுடன் நிற்பது போலவும், ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட தம்பி வா தலைமையேற்க வா என்ற அரசியல் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in

