வரத்து குறைந்து வெறிச்சோடிய மார்க்கெட்! விவசாயிகள் அதிர்ச்சி!
காலைப் பனி நடுக்கும் வகையில் காணப்படுகிறது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல பூச்சி வகைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பட்டு தயாரிக்க தேவைப்படும் மல்பெரி சாகுபடி தமிழகத்தில் உடுமலை முதலிடத்தில் இருந்து வருகிறது. இன்னும் பனிப்பொழிவு குறையாத காரணத்தால் உடுமலை பட்டுக்கூடு மார்க்கெட்டிற்கு வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மார்கழி கடந்து தை முடியும் தருவாயிலும் நாளுக்கு நாள் பனிப் பொழிவு அதிகரித்து வருகிறது. காலைப் பனி நடுக்கும் வகையில் காணப்படுகிறது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல பூச்சி வகைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
பட்டு தயாரிக்க தேவைப்படும் மல்பெரி சாகுபடி தமிழகத்தில் உடுமலை முதலிடத்தில் இருந்து வருகிறது. இன்னும் பனிப்பொழிவு குறையாத காரணத்தால் உடுமலை பட்டுக்கூடு மார்க்கெட்டிற்கு வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

உடுமலை சுற்றுப்புற பகுதிகளில், ஏறக்குறைய 4 ஆயிரம் ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, 1,500க்கும் மேற்பட்ட புழு வளர்ப்பு மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.துவக்க காலங்களில் இங்கு உருவாகும் பட்டுக்கூடுகள் கோவை, சேலம், ஒசூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள, பட்டுக்கூடு மார்க்கெட்களுக்கு விவசாயிகள் கொண்டு சென்று வந்தனர்.தற்போது பட்டு வளர்ச்சித்துறை சார்பில், உடுமலை அருகேயுள்ள மைவாடியில், பட்டுக்கூடு அங்காடி துவங்கப்பட்டிருக்கிறது.உடுமலை, பழநி, தாராபுரம், பெரியபட்டி, குடிமங்கலம், கலையமுத்துார், தொப்பம்பட்டி ஆகிய சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விவசாயிகளிடமிருந்து பட்டுக் கூடுகள் பெறப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதே நேரம் பட்டுக் கூடு கொள்முதல் செய்வதற்கும் தர்மபுரி,ஒசூர், கர்நாடகா ஆகிய இடங்களிலிருந்து வியாபாரிகளும் வந்த வண்ணம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பட்டு மார்க்கெட் சில தினங்களாக வெறிச்சோடி காணப்படுகிறது. அதிக பனிப்பொழிவால் வரத்து குறைந்துள்ளது என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
newstm.in

