Theme Check

காமெடி நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்!!

காமெடி நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்!!

காமெடி நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்!!
X

அண்மைக்காலமாக மாரடைப்பினால் மரணம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு, சூற்றுச்சூழல் மாற்றம், அமர்ந்திருந்தே வேலை செய்வது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மன அழுத்தம் உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பு 23 வயது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இப்படி மாரடைப்பால் ஏற்படும் மரணம் அதிகரித்து வரும் நிலையில், சினிமா துறையை சேர்ந்த நகைச்சுவை நடிகர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அல்லி நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்கிற லிட்டில் ஜான் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

little

3 அடி உயரம் கொண்ட இவர் ஐம்புலன்,வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தாலும், கிராமங்கள் தோறும் கோவில் திருவிழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டவர்.

அந்த வகையில் பள்ளிபாளையம் அருகே உள்ள மோடமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு தனது வீட்டிற்கு வந்து தூங்கியவர் மீண்டும் எழுந்திருக்கவில்லை.

john

உறவினர்கள் சென்று பார்த்த பொழுது மூக்கிலும், வாயிலும் ரத்தம் வந்த நிலையில் இருந்ததால், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே போல் இவரது மறைவால் நடிகரின் கிராமத்து மக்கள் சோகத்தை ஆழ்ந்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it