மக்களுக்கு ஆறுதல்... குறையும் பாதிப்பு! அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை! இன்றைய நிலவரம் என்ன?
மக்களுக்கு ஆறுதல்... குறையும் பாதிப்பு! அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை! இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடா்ந்து 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் பதிவாகி உள்ளது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஜுன்3) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாட்டில் தொடா்ந்து கொரோனா தொற்று 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,32,154 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், ஒரே நாளில் 2,887 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 3,37,989-ஆக அதிகரித்துள்ளது. தினசரி புதிய பாதிப்புகளைவிட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,11,499 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
நம் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,63,90,584 -ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 21,59,873 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 35,37,82,648 கோடி பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 22,10,43,693 பேருக்கு போடப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தேசிய அளவில் பாதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
newstm.in

