ட்விட்டர் இந்தியாவின் டாப் 10… பட்டியலில் தளபதி விஜய்!!
ட்விட்டர் இந்தியாவின் டாப் 10… பட்டியலில் தளபதி விஜய்!!

2021ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்குகளில் விஜய்யின் மாஸ்டர் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
அரசியல்வாதிகள், சினிமாத்துறையினர் என உலகின் பெரும்பாலான பிரபலங்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் ட்விட்டர் உறவுப்பாலமாக இருக்கிறது. குறிப்பாக, சினிமா துறையினர் புதுப்பட அறிவிப்புகள், வெளியீட்டுத் தேதிகள் உள்ளிட்டவற்றை ட்விட்டர் மூலமே வெளியிடுகின்றனர்.
அதன் அடிப்படையில், ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது ஹேஷ்டேக்கில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

அதனையொட்டி ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக், அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர் பெயர் என ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி ட்விட்டர் வெளியிட்டப் பட்டியலில் இந்தியாவில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்கில் கொரோனா ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களில் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் இருக்கிறது.
Most tweeted hashtags criteria
— ꈍவிநாயக்__மகாதேவ்⊰⊹ฺ (@Dheena__Jeya) December 9, 2021
Twitter Malaysia - No of tweets
Twitter Philippines - No of tweets
Twitter Singapore - No of tweets
Twitter India - No of authors 😂🤡@TwitterIndia 💦😤🤦#Valimai | #Ajithkumar pic.twitter.com/S4Rpii52Mf
பத்து ஹேஷ்டேக்கிலும் இடம்பிடித்த ஒரே சினிமா பெயர் ‘மாஸ்டர்’ தான். மேலும், சினிமாவில் விஜய்யின் ’பீஸ்ட்’ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிக லைக்குகள் மற்றும் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட போஸ்டர் என்றும் அறிவித்துள்ளது.
அதேபோல், அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் கொரோனா காலத்தில் உதவிகளை செய்த நடிகர் சோனு சூட் முதலிடத்திலும், நடிகைகளில் ஆலியா பட் முதலிடத்திலும் உள்ளார்.
newstm.in

