வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு.! பயனாளர்கள் அதிர்ச்சி..!!
வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு.! பயனாளர்கள் அதிர்ச்சி..!!

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 101 உயர்ந்து ரூ. 2,234.50 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது. முன்னதாக அக்டோபர் 6-ம் தேதி ரூ.1,865 ஆக இருந்த சிலிண்டர் விலை 2 மாதங்களில் ரூ.369 உயர்த்தப்பட்டுள்ளது.
வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் உணவகங்களில் நம்பி இருக்கும் ஓட்டல் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.