Theme Check

முதல்வரை தரக்குறைவாக பேசியதாக அதிமுக எம்.எல்.ஏ மீது புகார்!!

முதல்வரை தரக்குறைவாக பேசியதாக அதிமுக எம்.எல்.ஏ மீது புகார்!!

முதல்வரை தரக்குறைவாக பேசியதாக அதிமுக எம்.எல்.ஏ மீது புகார்!!
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக பாப்பிரெட்டிப்பட்டி .தி.மு. எம்.எல்.., மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி தி.மு. மாவட்ட இளைஞரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு தருமபுரி மாவட்ட .தி.மு.., சார்பாக, தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.., கோவிந்தசாமி, முதல்வர் ஸ்டாலின் போல குரலை மாற்றியும், தகாத வார்த்தையால் பேசினார்.

dmp dmk

இதனால் தருமபுரி மாவட்ட திமுகவினர், முதல்வரை தகாத வார்த்தையால் பேசிய கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோவிந்தசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி 20க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.

newstm.in

Next Story
Share it