ஹீரோவாக மாறும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் வில்லனாக களமிறங்கும் இசையமைப்பாளர்..!

ஹீரோவாக மாறும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் வில்லனாக களமிறங்கும் இசையமைப்பாளர்..!

ஹீரோவாக மாறும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் வில்லனாக களமிறங்கும் இசையமைப்பாளர்..!
X

இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தின் மூலம் பிரபலமடைந்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின், வில்லன் வேடத்தில் நடிப்பதற்காக கூத்துப்பட்டறையில் முக்கிய நடிப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

கேரளாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் சித்தார் விபின், நடிகராக வாழ்க்கையை துவங்கி பிறகு இசையமைப்பாளராக மாறியவர். பல்வேறு படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும், ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்கிற படம் இவருக்கு தனித்த அடையாளத்தை பெற்று தந்தது. அதேபோல அந்த படத்தில் அவர் ஏற்றிருந்த நகைச்சுவை கதாபாத்திரம் இன்றவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வாசுவும் சரவணனனும் ஒன்னா படிச்சவங்க, காஷ்மோரா, கேப்மாரி போன்ற படங்களில் சித்தார்த் விபின் நடித்துள்ளார். அதேபோல, மலையாளம் மற்றும் தமிழ் படங்களுக்கு அவர் இசையமைக்கும் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை அவர் நடித்த படங்களில் பெரும்பாலும் காமெடி வேடங்களே அவருக்கு கிடைத்துள்ளன. தற்போது சல்பர் என்கிற படத்தில் முதன்முறையாக வில்லனாக நடிக்கவுள்ளார் சித்தார்த் விபின். இந்த படத்தில் கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வில்லன் வேடத்தில் நடிப்பதற்காக கூத்துப் பட்டறையில் சேர்ந்து பல்வேறு நடிப்பு பயிற்சிகளை சித்தார் விபின் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it