Theme Check

பெண்களுக்கு மீண்டும் சலுகை.. அரசு விரைவு பேருந்துகளில்.. அரசு அதிரடி அறிவிப்பு..!

பெண்களுக்கு மீண்டும் சலுகை.. அரசு விரைவு பேருந்துகளில்.. அரசு அதிரடி அறிவிப்பு..!

பெண்களுக்கு மீண்டும் சலுகை.. அரசு விரைவு பேருந்துகளில்.. அரசு அதிரடி அறிவிப்பு..!
X

தமிழகத்தில், படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது

திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன், நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம், தினசரி லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்துக்கு இழப்பு என்றாலும், ஒரு மாதத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு வரை சேமிக்கும் நிலை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் போது 1LB, 4LB ஆகிய படுக்கைகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண் பயணிகள் யாரும் முன்பதிவு செய்யாத போது, அந்த படுக்கையை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொள்ளலாம்.

எனினும், பேருந்து புறப்படும் இறுதி நேரம் வரை அந்த இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Next Story
Share it