மாநாடு படம்… மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குநர்!!
மாநாடு படம்… மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குநர்!!

சிம்பு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மாநாடு படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன், படத்தை தாமதமாக பார்த்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சிம்புவுடன் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடி ரூபாய் வசூலும் செய்தது.

தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு கடந்த 24ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ‘மாநாடு’ வெளியானது, இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் தாமதமாய் ’மாநாடு’ பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன் என்று கூறியுள்ளார்.

சிம்பு, எஸ்.ஜே சூர்யா அருமை. யுவன், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்று அவர் பாராட்டியுள்ளார்.
newstm.in

