Theme Check

பேனருக்கு புகைப்படம் எடுக்க சென்ற இடத்தில் மோதல்.. மாப்பிள்ளைக்கு கத்திக்குத்து !!

பேனருக்கு புகைப்படம் எடுக்க சென்ற இடத்தில் மோதல்.. மாப்பிள்ளைக்கு கத்திக்குத்து !!

பேனருக்கு புகைப்படம் எடுக்க சென்ற இடத்தில் மோதல்.. மாப்பிள்ளைக்கு கத்திக்குத்து !!
X

காதலித்த பெண் விவகாரத்தில் புதுமாப்பிள்ளை உட்பட 5 பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் பாண்டிமணி (24). இவரும், சிவகங்கையைச் சேர்ந்த பிரியதர்ஷனி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பிரியதர்ஷனியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரியதர்ஷினியை வேறொருவருக்கு திருமணம் செய்துகொடுக்க பெற்றோர் முடிவுசெய்தனர். அதன்படி, பிரியதர்ஷினியை நெற்குப்பையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் செய்துவைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து, நிச்சயமும் செய்து முடித்தனர்.

police

இந்நிலையில், பிரியதர்ஷினியும், பாலமுருகனும் நேற்று இரவு வேந்தன்பட்டியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் திருமணத்திற்காக பத்திரிகை மற்றும் டிஜிட்டல் பேனர் வைப்பதற்காக புகைப்படம் எடுக்க வந்துள்ளனர். பாலமுருகனின் நண்பர்களும் அவர்களுடன் வந்துள்ளனர். அப்போது, பிரியதர்ஷினியின் காதலன் பாண்டிமணி, அவரது சகோதரர் மற்றும் நண்பர்கள் அங்கு வந்து பிரியதர்ஷினி மற்றும் பாலமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

police

இந்த வாக்குவாதம் முற்றி சிறிது நேரத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டி மணி, தான் ஏற்கனவே எடுத்துவந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் படுகாயமடைந்த காயமடைந்த 5 மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பொன்னமராவதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாண்டிமணி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it