புதுச்சேரியுடன் மீண்டும் மோதல்.. மல்லாடி கிருஷ்ணாராவ் நியமனத்துக்கு கிரண் பேடி எதிர்ப்பு !
புதுச்சேரியுடன் மீண்டும் மோதல்.. மல்லாடி கிருஷ்ணாராவ் நியமனத்துக்கு கிரண் பேடி எதிர்ப்பு !

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் மல்லாடி கிருஷ்ணாராவ். இவர், அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டார். அதனால் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், மல்லாடி கிருஷ்ணாராவுக்கும் இடையில் மோதல் அடிக்கடி ஏற்படும்.
காங்கிரஸ் ஆட்சியின்போது, எம்எல்ஏவாக 25 ஆண்டுகள் மல்லாடி கிருஷ்ணாராவ் பணிபுரிந்ததாகக் குறிப்பிட்டு பாராட்டு விழா நடந்தது. ஆனால், அவர் 25 ஆண்டுகள் பணிபுரியவில்லை என்று நேரடியாக கிரண்பேடி விமர்சித்திருந்தார்.

கடந்த ஆட்சியில் இறுதியில் பதவியை ராஜிநாமா செய்த மல்லாடி கிருஷ்ணாராவ், காங்கிரஸில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். வழக்கமாக அவர் போட்டியிடும் ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை போட்டியிட வைத்தார். ஆனால் ரங்கசாமி தோற்றார். அதையடுத்து மாநிலங்களவை எம்பி பதவியை மல்லாடிக்கு தர முயற்சித்தும் நடக்கவில்லை.
இந்நிலையில் புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதியாக மல்லாடி கிருஷ்ணாராவ் நியமிக்கப்பட்டுள்ளார். மல்லாடி கிருஷ்ணாராவ் நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு கிரண்பேடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் இந்த உத்தரவை பகிர்ந்துள்ள முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இந்த நியமனம் ஏமாற்றமளிக்கிறது. வருந்தத்தக்கது. மிகவும் கவலை அளிக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
newstm.in

