பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்து – இளம்பெண் கைது!!
பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்து – இளம்பெண் கைது!!

பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்துக்கூறி வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகல்கோட் மாவட்டம் முதோல் நகரைச் சேர்ந்த குத்மா ஷேக் என்ற பெண், கடந்த 23ஆம் தேதி பாகிஸ்தான் குடியரசு தினத்தையொட்டி வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.
அதில், அனைத்து நாடுகளிலும் அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இறைவன் அருள்புரிவானாக என்று பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக அருண் குமார் பஜந்திரி என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மத அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே வெறுப்பை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குத்மா ஷேக்கின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பாகிஸ்தான் குடியரசு தினவிழாவை கொண்டாடுவது போல் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்காவிட்டால் அதை எதிர்த்து இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபடுவார்கள், அது தடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
newstm.in

