Theme Check

அதிர்வலைகளை ஏற்படுத்தி ரசிகர்களை கவரக்கூடியவர் ரஜினி- ச‌ச்சின் வாழ்த்து !!

அதிர்வலைகளை ஏற்படுத்தி ரசிகர்களை கவரக்கூடியவர் ரஜினி- ச‌ச்சின் வாழ்த்து !!

அதிர்வலைகளை ஏற்படுத்தி ரசிகர்களை கவரக்கூடியவர் ரஜினி- ச‌ச்சின் வாழ்த்து !!
X

’தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. 2019ஆம் ஆண்டிற்கான இந்த விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் ஒருவழியாக, டெல்லியில் நேற்று 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.

rajini award

இந்த விழாவில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த விருதை வழங்கினார். விழாவில் கலந்துகொண்ட அனைவருமே ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும், ரஜினிகாந்த்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு முறையும் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக் குறைவு. ஆனால், தலைவர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அதைச் செய்கிறார். தனது படைப்புகளால் பார்வையாளர்களைக் கவர்கிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள், என்று தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it