Theme Check

விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி !!

விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி !!

விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி !!
X

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக-வின் வசமிருக்கும் உ.பி-யை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் தற்போது தீவிரமாக தேர்தல் பணி செய்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தேர்தலுக்கான மாநிலப் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது மாநிலம் முழுவதும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறையில் விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கி, உ.பி மக்களின் கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து, உத்தரபிரதேச மாநில வளர்ச்சி மற்றும் மக்களுக்காக பல்வேறு பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்தும், அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டும் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது, உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என பிரியங்கா காந்தி அதிரடியாக வாக்குறுதி அளித்துள்ளார்.

priyanka gandhi
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் சென்று சேர்க்கும் வகையில் பாராபங்கி பகுதியில் இருந்து பிரதிக்யா யாத்திரையை பிரியங்கா காந்தி தொடங்கி வைத்தார். அதன் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், 20 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கான மின்சார கட்டணம் ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கினார்.

கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்ற பிரியங்கா காந்தி, பெண்களுக்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என கூறினார்.

newstm.in


Tags:
Next Story
Share it