ஷாருக் கான் மகன் கைது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி: அமைச்சர் பகீரங்க புகார் !!

ஷாருக் கான் மகன் கைது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி: அமைச்சர் பகீரங்க புகார் !!

ஷாருக் கான் மகன் கைது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி: அமைச்சர் பகீரங்க புகார் !!
X

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அக்கப்பலில் பயணிகள் போன்று பயணித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடுகடலில் வைத்து கப்பலில் சோதனை நடத்தினர்.

Shahrukh-Khan-son-Aryan-khan

அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான். இவரை நாளை வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த மும்பை நீதிமன்றம் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு அனுமதி அளித்தது. அதன்படி அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரியன் கானுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா எனவும் அவரது செல்போன்களை ஆய்வு செய்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து இதுவரை அரசியல் தலைவர்கள் வாய் திறக்காமல் இருந்தனர்.

Shahrukh-Khan-son-Aryan-khan

இந்த நிலையில் முதன்முறையாக மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக், ஷாருக்கான் மகன் கைது குறித்து பேசியுள்ளார். ஆர்யன் கான் கைது குறித்து அவர் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக கிரைம் நிருபர்களிடையே, அடுத்த இலக்கு ஷாருக்கான்தான் என்ற செய்தி உலாவிக் கொண்டே இருந்தது. இந்த சமயத்தில் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது திட்டமிட்ட சதி என கூறியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it