சசிகலா விடுதலையை தடுக்க சதி! வக்கீல் பரபரப்பு புகார் !!
சசிகலா விடுதலையை தடுக்க சதி! வக்கீல் பரபரப்பு புகார் !!

சசிகலா விடுதலையை தடுக்க சிறை நிர்வாகம் சதித்திட்டம் தீட்டுவதாக சசிகலாவின் ஆதரவாளரும், வழக்கறிஞருமான ராஜராஜன் என்பவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடந்த 20-ம் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சசிகலாவின் ஆதரவாளரும், வழக்கறிஞருமான ராஜராஜன், பெங்களூர் காவல்துறை ஆணையருக்கு இ -மெயில் மூலம் ஒரு புகார் அனுப்பியுள்ளார். அதில், சசிகலா விடுதலையை காலதாமதப்படுத்த சிறைநிர்வாகம் சதித்திட்டம் தீட்டுவதாகவும், இதனால் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சசிகலா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தாலும் அங்கிருந்தபடியே விடுதலையாவார் என சசிகலாவின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், பிப்ரவரி முதல் வாரத்தில் தான் சசிகலா தமிழகம் வருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

