தொடரும் உணவு சர்ச்சை..!! மீன் சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
தொடரும் உணவு சர்ச்சை..!! மீன் சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

திருவனந்தபுரத்தில் கல்லறை என்ற பகுதியில் பல்வேறு கடைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள ஒரு கடையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிஜூ என்பவர் 200 ரூபாய்க்கு குதிரை கானாங்கெளுத்தி என்ற மீனை வாங்கி உள்ளார்.
பின்னர் அதனை வீட்டில் கொடுத்து மனைவியை மீன் குழம்பு வைக்கும்படி கூறியிருக்கிறார். பின்னர் மீன் குழம்பை பிஜூ அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் சாப்பிட்டு முடித்துள்ளனர். இந்நிலையில் முதலில் பிஜூவின் மகளுக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அன்று இரவில் பிஜூவின் மனைவியும் வயிற்று வலிக்கு ஆளானார்.
இதன்பின்னர் குடும்பத்தில் உள்ள 4 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் உண்ட உணவில் விஷத்தன்மை கலந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.பிஜூ மீன் வாங்கிய கடையில் மற்றொருவர் மறுநாள் மீன் வாங்கியுள்ளார். அந்த மீனில் இருந்து புழுக்கள் வந்துள்ளன. எனவே பிஜூ வாங்கியதும் சுகாதாரமற்ற அழுகிய மீன்களாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லறை கிராம அலுவலர் மற்றும் வெஞ்சமா ரம்மூடு போலீசார் இணைந்து அப்பகுதிக்கு சென்று மீன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

