தொடரும் அவலம்.. முதலமைச்சர் கவனத்தில் கொள்வாரா? - பெண்கள் எதிர்பார்ப்பு
தொடரும் அவலம்.. முதலமைச்சர் கவனத்தில் கொள்வாரா? - பெண்கள் எதிர்பார்ப்பு

செங்கல்பட்டு அருகே மீனவ பெண்னை பேருந்தில் இருந்து நடத்துநர் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு அமைந்தபிறகு, சாதாரண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களும் ஆர்வமுடன் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணித்து வருகின்றனர். ஆனால், பல இடங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே கன்னியாகுமரியில் நரிக்குறவ குடும்பத்தினர் மற்றும் மீன் வியாபாரம் செய்யும் மூதாட்டி ஒருவரை வெவ்வேறு நாட்களில் அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அது தொடர்பாக போக்குவரத்துத்துறை நடவடிக்கை

தற்போது அதேபோன்று மீண்டும் நடந்துள்ளதால் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கொக்கிலிமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் (52). இவர், இன்று காலை மீன் வியாபாரத்திற்காக மீனை ஏலம் எடுத்து அதனை மீன் கூடையில் வைத்து மகாபலிபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அங்கு வந்த தாம்பரம் செல்லக்கூடிய (தடம் எண் 515 பேருந்து எண் TN-01-AN -1842) பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது அப்பேருந்தின் நடத்துனர் மீன் கூடையை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறக்கூடாது என்று கூறி அப்பெண்மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.
இதனால் அப்பெண் பெரும் வேதனை அடைந்தார். மேலும் இந்த பேருந்தில் இந்த நடத்துனர் பணியில் மட்டுமே பேருந்தில் ஏற்ற மறுப்பதாகவும் அவதூறாக பேசுவதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in

