தொடரும் சோகம்.. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினர்கள் 6 பேர் ஒரே நேரத்தில் பலி !

தொடரும் சோகம்.. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினர்கள் 6 பேர் ஒரே நேரத்தில் பலி !

தொடரும் சோகம்.. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினர்கள் 6 பேர் ஒரே நேரத்தில் பலி !
X

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் உறவினர்கள் ஆறு பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். ஆனால், கடந்த ஆண்டு இவர் திடீரென தற்கொலை செய்துக்கொண்டது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது மரணத்தை தொடர்ந்து பல்வேறு யூகங்கள் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டம் ஜுமாய் என்ற இடத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினர்கள் 6 பேர் பலியாகினர்.

rajputh family

பாட்னாவில் உள்ளள உறவினரின் இறுதி சடங்குக்கு சென்றுவிட்டு அனைவரும் காரில் வீடு திரும்பியுள்ளனர். ஜூமாய் என்ற இடத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் லால்ஜித் சிங் (சுஷாந்த் சிங்கின் மைத்துனர்), நேமானி சிங் என்கிற அமித் சேகர், ராமச்சந்திர சிங், குழந்தை தேவி, அனிதா தேவி, பிரீதம் குமார் (ஓட்டுனர்) ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it