மெட்ரோ ட்ரெய்லேயும் கட்டுப்பாடு! ரூ.200 அபராதம்!
மெட்ரோ ட்ரெய்லேயும் கட்டுப்பாடு! ரூ.200 அபராதம்!

மெட்ரோ ரயில்களில் இன்று முதல் முகக்கவசம் இல்லாமல் பயணித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை எடுத்து வருகிறது. நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முகக்கவசம் இல்லாமல் பொதுஇடங்களில் வருவோரிடம் ரூ.200 அபராதம் விதித்துக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் இல்லாமல் பயணித்தாலோ அல்லது முகக்கவசம் முறையாக அணியாமல் இருந்தாலோ ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த நடைமுறையை செயல்படுத்த உள்ளதாகவும், இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் சிறப்புக் குழு அமைத்து, கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறு வனம் தெரிவித்துள்ளது.
newstm.in

