Theme Check

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து.. கைலாசாவில் இருந்து பாஜகவுக்கு கண்டனம்..!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து.. கைலாசாவில் இருந்து பாஜகவுக்கு கண்டனம்..!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து.. கைலாசாவில் இருந்து பாஜகவுக்கு கண்டனம்..!
X

சமீபத்தில், பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையாக மாறியது.

இதற்கு, இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்து கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அவர் மீது பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கைலாசா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளதாக ட்விட்டர் பதிவு ஒன்று பரவி வருகிறது.

அந்த பதிவில், ‘முகமது நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக இந்திய அரசியல்வாதிகள் கூறிய கருத்துக்கு கைலாசா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சு.. பாஜக அரசியல்வாதிகளுக்கு
கைலாச வெளியுறவு அமைச்சகம் இன்று மதியம் இந்திய உயர் ஸ்தானிகரை அழைத்து, இந்த சம்பவம் தொடர்பாக எங்களின் முழு கண்டனத்தை பதிவு செய்தது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த கட்சி நிர்வாகிகளை இடைநீக்கம் செய்ய ஆளும் கட்சி எடுத்த முடிவை கைலாசா வரவேற்கிறது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சு.. பாஜக அரசியல்வாதிகளுக்கு
அமைதியை குலைக்கும் நடவடிக்கைகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை முடிவுக்கு கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கைலாசா கேட்டுக் கொள்கிறது’ என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it