சர்ச்சை இயக்குனரின் படத்துக்கு அனுமதி மறுப்பு !!

சர்ச்சை இயக்குனரின் படத்துக்கு அனுமதி மறுப்பு !!

சர்ச்சை இயக்குனரின் படத்துக்கு அனுமதி மறுப்பு !!
X

இயக்குநர்களில் தமது வித்தியாசமான,பரபரப்பான கருத்துக்களால் அவ்வபோது சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா சமீபத்தில் தெலுங்கானாவில் 2019ல் டாக்டர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. அந்த கொலையாளிகள் என்கவுண்டரில் உடனடியாகக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இதனை மையமாக வைத்து திஷா என்கவுண்டர் என்ற படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார். இதில் திஷாவாக நடித்திருப்பவர் நாயகி சோனியா அகுலா .இந்த படத்தை தடை செய்யக் கோரி திஷாவின் தந்தை ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் பல்வேறு பெண்கள் சங்கத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் திஷா என்கவுண்டர் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இதில் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும், பாலியல் பலாத்கார கொடுமையை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர். இதனையடுத்து இயக்குநர் இந்த படத்தை மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பி உள்ளார்.

Tags:
Next Story
Share it