Theme Check

சர்ச்சைக்குள்ளான இந்திய வரைபடம்!!

சர்ச்சைக்குள்ளான இந்திய வரைபடம்!!

சர்ச்சைக்குள்ளான இந்திய வரைபடம்!!
X

உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் இந்திய வரைபடம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சைய ஏற்படுத்தியதை அடுத்து, அதற்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் பகுதி இந்தியாவுடன் சேர்க்கப்படாமல் தனியாக வேறு நிறத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சாந்தனு சென், பிரதமர் மோடிக்கு ஜனவரி 30ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராஜ்ய சபாவில் சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கேள்வி எழுப்பினார். வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதா என்று அவர் கேட்டார்.

who

அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் பதில் அளித்தார். அதில், உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் இந்திய வரைபடத்தை தவறாக குறிப்பிட்டுள்ளது தொடர்பாக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் ஜெனிவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர்கள் தங்கள் இணையதளத்தில் மறுப்பு பதிவிட்டு தெளிவுபடுத்தியுள்ளனர்.

newstm.in

Next Story
Share it