Theme Check

முரண்டு பிடித்த ராஜநாகம்.. தனது ஸ்டைலில் தட்டி தூக்கிய வாவா சுரேஷ்..!

முரண்டு பிடித்த ராஜநாகம்.. தனது ஸ்டைலில் தட்டி தூக்கிய வாவா சுரேஷ்..!

முரண்டு பிடித்த ராஜநாகம்.. தனது ஸ்டைலில் தட்டி தூக்கிய வாவா சுரேஷ்..!
X

கேரளாவின் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ். இவர், கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி கோட்டயம் அருகே உள்ள குறிச்சி என்ற பகுதியில் ஒரு வீட்டில் நாக பாம்பை பிடித்து சாக்கில் அடைக்க முயன்றார். அப்போது, அந்த பாம்பு வாவா சுரேஷின் வலது தொடையில் கடித்தது.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்தார். தற்போது, மீண்டும் தனது வழக்கமான பாம்பு பிடிக்கும் பணியை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று, கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வாவா சுரேஷ், முரண்டு பிடித்த ராஜநாகத்தை தனக்கே உரிய பாணியில் லாவகமாக பிடித்தார்.

பின்னர் அந்த ராஜநாகத்தை, சாக்குப்பையில் போட்டு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவதற்காக எடுத்துச் சென்றார்.
King Cobra: Wawa Suresh throws a 12 foot long royal dragon as Alec RS News  | Reading Sexy

Next Story
Share it