Theme Check

"சிறிதான மார்பு பகுதி" கால்பந்து வீராங்கனைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. பிரதமருக்கு எழும் கண்டனங்கள் !!

"சிறிதான மார்பு பகுதி" கால்பந்து வீராங்கனைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. பிரதமருக்கு எழும் கண்டனங்கள் !!

சிறிதான மார்பு பகுதி கால்பந்து வீராங்கனைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. பிரதமருக்கு எழும் கண்டனங்கள் !!
X

ஒரு நாட்டின் பிரதமரே பெண் வீரர்கள் குறித்து இப்படி பேசலாமா என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தன்சானியா நாட்டின் பிரதமர் சமையா சுலுகு ஹாசன் சமீபத்தில் ஒரு கால்பந்தாட்ட வீரர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் வீராங்கனைகள் குறித்து அவர் பேசியது தற்போது தான் சர்வதேச அளவில் சர்ச்சையாகியுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, கால்பந்து விளையாடும் பெண்களுக்கு பெரும்பாலும் மார்பு பகுதி சிறிதாக தான் இருக்கும். நீங்கள் அவர்களை பார்க்கும் போது ஆண் என்றே நினைப்பீர்கள். ஆனால் முகத்தை பார்த்தால் தான் அவர்கள் பெண் என்றே தெரியும்.

thansaniya

ஆண்கள் திருமணம் செய்ய பெண்களுக்கு சில தகுதிகளை எதிர்பார்ப்பார்கள். பார்க்க அழகாக இருக்கும் பெண்களை தான் ஆண்கள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு இந்த தகுதிகள் பெரும்பாலும் இருக்காது.

இவ்வளவு தியாகங்களை செய்து தான் பெண் வீராங்கனைகள் நம் நாட்டிற்கு கோப்பைகளை கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக தான் இருக்கிறது. அவர்களுக்கு திருமணம் என்பது பெரும் கனவு தான். நீங்கள் அவர்களை மனைவியாக ஏற்றுக்கொண்டாலும் உங்கள் வீட்டில் அவர்களை ஏற்றுக்கொள்வது சவாலாக இருக்கிறது என பேசினார்.


இந்த வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமையா சுலுகு ஹாசன் தன்சானியா நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார். அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it