Theme Check

முதல்வர் மனைவி குறித்து சர்ச்சை ‘ட்வீட்’.. பாஜக தொண்டருக்கு போலீஸ் சம்மன்..!

முதல்வர் மனைவி குறித்து சர்ச்சை ‘ட்வீட்’.. பாஜக தொண்டருக்கு போலீஸ் சம்மன்..!

முதல்வர் மனைவி குறித்து சர்ச்சை ‘ட்வீட்’.. பாஜக தொண்டருக்கு போலீஸ் சம்மன்..!
X

மகாராஷ்டிரா மாநில முதல்வரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு சமீபத்தில் முதுகெலும்பு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர், பெரும்பாலான நாட்கள் ஓய்வில் இருந்து வருகிறார்.

இதனால், முதல்வர் பொறுப்பை உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி வாஹினி அல்லது உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு வழங்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளது.
Who Is Rashmi Thackeray, Wife Of Maharashtra CM Uddhav Thackeray
இந்நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரேவை ‘மராத்தி ராப்ரி தேவி’ என்று கூறி ஆட்சேபனைக்குரிய ட்வீட்டை வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

ராஷ்மி தாக்கரேவை பீகார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியுடன் ஒப்பிட்டுப் பேசியதாக பாஜகவை சேர்ந்த ஜித்தன் கஜாரியாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Next Story
Share it