சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி! கர்ணன் இயக்குநருக்கு வந்த சோதனை!

சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி! கர்ணன் இயக்குநருக்கு வந்த சோதனை!

சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி! கர்ணன் இயக்குநருக்கு வந்த சோதனை!
X

தமிழகத்தில் அசுரவேகம் எடுத்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இருந்த போதிலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை விஜய்சேதுபதி மீறி விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தின் சிறப்பு காட்சி நடிகர் நடிகைகளுகாக திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் போது நடிகர் விஜய்சேதுபதி படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜிடம் படம் நன்றாக இருப்பதாக பாராட்டு தெரிவித்து அவரை கட்டிப்பிடித்து கைகளை முத்தமிட்டார்.

அந்த சமயத்தில் விஜய்சேதுபதி முககவசம் அணியவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஜய்சேதுபதி முகக்கவசம் அணியாமல், சமூக விலகலை கடைபிடிக்காமல் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொரோனா விதிமுறைகளை மீறி இருப்பது குறித்து ரசிகர்கள் பலரும் விஜய்சேதுபதியே இப்படி செய்யலாமா? உங்களை பார்த்து ரசிகர்களும் இப்படித் தானே செய்வார்கள் என விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். ஆளாளுக்கு பிரச்சனையை கிளப்ப, இப்போது கர்ணன் இயக்குநர் மாரி செல்வராஜ், தன்னால் விஜய்சேதுபதிக்கு நேர்ந்த சர்ச்சைக்கு சங்கடத்தில் நெளிகிறார்.

Tags:
Next Story
Share it