டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டதால் சர்ச்சை!!
டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டதால் சர்ச்சை!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டது விமர்சனத்திற்குள்ளான நிலையில், மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு அரசுப் பணிகள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டது.
அதனுடன் மாதிரி வினாத்தாளும் வெளியிடப்பட்டது. அதிகாரிகள் நிலையிலான போட்டித் தேர்வுகளான குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் திருக்குறள் நீக்கப்பட்டு இருந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பாடத்திட்டம் இடம்பெற்றிருந்தது.

புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கப்பட்டு இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து,திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
newstm.in

