விஜய் சேதுபதியின் ‘வி.ஜே.எஸ் 46’ படத்தில் நடிக்கும் ’குக் வித் கோமாளி’ பிரபலம்..!
விஜய் சேதுபதியின் ‘வி.ஜே.எஸ் 46’ படத்தில் நடிக்கும் ’குக் வித் கோமாளி’ பிரபலம்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழடைந்த டிவி பிரபலம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘வி.ஜே.எஸ் 46’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தற்போது ஒளிப்பரப்பாகி வரும் இரண்டாவது சீசனும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. விரைவில் இந்த சீசனும் நிறைவடையவுள்ளது.
தமிழில் இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வேற்று மொழிகளில் இந்நிகழ்ச்சியை தயாரிக்க தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதில் முதல் முயற்சியாக கன்னடத்தில் குக் வித் கோமாளி தயாராகவுள்ளது. அதற்கு ‘குக் வித் கிறுக்கு’ என்று பெயர் சூட்டியுள்ளனர். அதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்தவர் புகழ். மெக்கானிக்கல் கடையில் வேலை பார்த்து, படிப்படியாக முன்னேறி இன்று விஜய் டிவி-யில் முக்கிய பிரபலமாக இருக்கிறார். அவருடைய வளர்ச்சி பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அண்மையில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கிரெட்டா காரை சொந்தமாக வாங்கினார் புகழ். அதற்கு அவருக்கு ரசிகர்கள் பெரியளவில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

தற்போது மற்றொரு நல்ல செய்தியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புகழ் நடிக்கவுள்ளார். அவருடைய கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த குணசித்திர வேடமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கும் படத்திலும் புகழ் நடித்து வருகிறார். மேலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்திலும் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஷிவாங்கியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

