குக்கர் வெடித்து சிதறியது.. நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை வீட்டில் விபத்து!!
குக்கர் வெடித்து சிதறியது.. நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை வீட்டில் விபத்து!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் கடந்த 2010ஆம் ஆண்டு சூப்பர் ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. அழகிய இரட்டையர்களாக அஞ்சனா மற்றும் மணிமேகலையின் நிகழ்ச்சி தமிழக இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. நிகழ்ச்சிக்கு பாட்டு கேட்பதற்காக போன் செய்வதை விட அவரிடம் பேசுவதற்காகவே பலரும் போன் செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ம் ஆண்டு நடன கலைஞர் உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதால், திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதி தனியாகவே வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிமேகலையின் வீட்டில் சமையல் செய்பவர் வராததால் குக்கரில் மணிமேகலை சமையல் செய்துள்ளார். பின்னர் விசில் வராமல் குக்கர் சிறிது நேரத்தில் வெடித்து சிதறியதால் சமையலறையை நாசமாகியுள்ளது. இதனை உசைன் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் கேள்விப்பட்டு அவரது ரசிகர்கள் பதற்றமடைந்தனர்.
newstm.in


