Theme Check

#BREAKING:- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து.. கேப்டன் வருண் சிங் மரணம்..!

#BREAKING:- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து.. கேப்டன் வருண் சிங் மரணம்..!

#BREAKING:- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து.. கேப்டன் வருண் சிங் மரணம்..!
X

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி காலமானதாக விமானப்படை தெரிவித்திருக்கிறது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: வதந்திகளை பரப்ப வேண்டாம்- விமானப்படை || India  Air force uninformed speculation may be avoided
கடந்த 8-ம் தேதி, குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அதில் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங்கிற்கு முதலில் குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், உயர் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தற்போது விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் அவர்களுக்கு தீவிர சிகிச்சை!
வருண் சிங் உயிர் பிழைத்திருந்தால் விபத்து குறித்த விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணியிருந்த நிலையில் இந்த மரணம் தற்போது விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஒருவர் கூட தப்பிக்கவில்லை என்ற செய்தி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story
Share it