Theme Check

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – வெளியான புதிய தகவல்கள்!!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – வெளியான புதிய தகவல்கள்!!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – வெளியான புதிய தகவல்கள்!!
X

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை அறிக்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் பல புதிய தகவல்கள் உள்ளன. விபத்துக்கு தொழில்நுட்ப அல்லது இயந்திர கோளாறு, நாசவேலை காரணம் அல்ல என தெரியவந்துள்ளது. ஹெலிகாப்டர் நல்ல நிலையில் இருந்ததாகவும் CFIT எனப்படும் தொழில்நுட்ப குறியீடே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

அதாவது அந்த தருணத்தில் முடிவெடுப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

chopper-crash

மோசமான வானிலையால் முடிவெடுப்பதில் பைலட் அல்லது அவரது குழுவினருக்கு தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அத்துறை வல்லுனர்கள் CFIT என்பதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான், விபத்து நடைபெற 8 நிமிடங்கள் இருந்த போது ஹெலிகாப்டரை தரையிறக்கப் போவதாக பேசியிருந்ததாக கூறப்படுகிறது. அன்றைய தினம் வானிலை மிக மோசமானதாக இருந்துள்ளது.

chopper-crash

அடர்பனி காரணமாக பார்வை தெளிவாக இல்லாததால் தரையிலிருந்து 600 மீட்டர்கள் உயரத்தில் மட்டுமே ஹெலிகாப்டரை இயக்கியிருக்கிறார். மேலும் அவர் மலை ரயில் பாதையை தொடர்ந்து வெலிங்டனுக்கு பயணமாகியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற பின்னர், மலை ரயில் பாதையில் சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த ஹெலிகாப்டர் மோதலுக்கு முன்பு எடுத்த வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it