Theme Check

கொரோனா 2ஆவது அலை மே வரை நீடிக்குமாம்.. நிபுணர் குழு எச்சரிக்கை !!

கொரோனா 2ஆவது அலை மே வரை நீடிக்குமாம்.. நிபுணர் குழு எச்சரிக்கை !!

கொரோனா 2ஆவது அலை மே வரை நீடிக்குமாம்.. நிபுணர் குழு எச்சரிக்கை !!
X

உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.

இரு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் பாதிப்பு 300 என்ற அளவில் குறைந்த நிலையில் தற்போது ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது. இதனால் சுகாதாரத்துறை மற்றும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் தற்போது தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த கொரோனா தீவிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் பாதியில் இது புதிய உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக சவும்ய காந்தி கோஷ் தலைமையிலான பாரத ஸ்டேட் வங்கி நிபுணர் குழு கணித்துள்ளது. ஏப்ரல் 2வது பாதிக்கு பிறகு தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து மே இறுதியில் நிலைமை கட்டுக்குள் வரும் எனவும் அந்த நிபுணர் குழு கூறியுள்ளது.

பொது முடக்கம் அமலாக்கம் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல என்றும் தடுப்பூசி மூலம் மட்டுமே தொற்றை குறைக்க முடியும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it